Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w/join

பாடல் ஆசிரியர் - பேரா. சொ அரிய நாயகம்

ஈச்சனாரி சோலைக் குள்ளே எழில் மணக்குது!
தெய்வ எழில் மணக்குது!

என் இதயத்திலே வேலமுகம் கனி கொடுக்குது.
அருள் கனி கொடுக்குது!

தமிழ் பூச்சொரியும் தேன் எடுத்து கவி தொடுக்குது.
இதய கவி தொடுக்குது.

சிவ போதத்திலே அன்பு மனம் செவி மடுக்குது.
இன்ப செவி மடுக்குது!

ஐந்து கரப் பிள்ளையிடம் ஆசை பெருகுது.
நெஞ்சில் ஆசை பெருகுது!

அவன் அழகு விழி அருவியிலே சுடர் வருகுது.
அறிவுச் சுடர் வருகுது.

எங்கும் தந்த மலர் சேவடியில்
கருணை பருகுது!
மனம் கருணை பருகுது.!

அந்த களிப்பிடையே எனைத் தொடரும் இருள் விலகுது.!
பிறவி இருள் விலகுது!

ஔவைக்கு அருள் செய்ததற்கு என்ன காரணம்!
அது என்ன காரணம்!

அவள் அமுது அருந்தி மயங்கியதோ இந்த பூரணம்!
நம் சொந்த பூரணம்!

இன்று செவ்வையுடன் கட்டி வைத்தேன் நெஞ்சில் தோரணம்!
என் நெஞ்சில் தோரணம்!

மனித சேவை செய்ய வந்திடுமோ இனிய வாரனம்!
நம் புனித வாரனம்!